அழகான பழனிமலை ஆண்டவா
உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே
முருகா… முருகா.. முருகா… முருகா..
வெள்ளைத் திருநீறும் வெற்றிவடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வரும் வழி நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உனைப்பாட அருள்வாய் ஐயா.
முருகா… முருகா.. முருகா… முருகா..
நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருஅருள் புரிவாய்
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதானய்யா
முருகா… முருகா.. முருகா… முருகா..
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே
முருகா… முருகா.. முருகா… முருகா..